Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆனையிறவில் மீண்டும் இராணுவ சோதனை சாவடி

ஆனையிறவில் மீண்டும் இராணுவ சோதனை சாவடி

கடந்த ஏப்பிரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களை அடுத்து யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் இராணுவ , பொலிஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இந்நிலையில் கடந்த மாதம் முதல் சோதனை சாவடிகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் மீண்டும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு யாழ். குடா நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனையிறவில் மீண்டும் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தனியார் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது.அத்தோடு கண்டி நெடுஞ்சாலையில் , நாவற்குழி பாலத்திலும் இராணுவ சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ள போதிலும் அதில் சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன் வாகன இலக்கங்களையும் பதிவு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *