Search
Wednesday 20 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆயுத விற்பனையில் அமெரிக்காவே முதலிடத்தில்- மத்திய கிழக்கிற்கே அதிக ஆயுதங்கள் விற்பனை- சர்வதேச அமைப்பு தகவல்

ஆயுத விற்பனையில் அமெரிக்காவே முதலிடத்தில்- மத்திய கிழக்கிற்கே அதிக ஆயுதங்கள் விற்பனை- சர்வதேச அமைப்பு தகவல்

கடந்த ஐந்து வருடகாலப்பகுதியில் அமெரிக்காவின் ஆயதவிற்பனையில் அரைவாசிக்கு மேல் யுத்தத்தில் சிக்கியுள்ள மத்திய கிழக்கிற்கு சென்றுள்ளது என ஸ்டொக்கோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
சவுதிஅரேபியாவே அதிகளவு அமெரிக்க ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் ஸ்டொக்கோம் அமைப்பு தெரிவித்துள்ளது.
2013 முதல் 2017 வரையான காலப்பகுதியில் சர்வதேச ஆயுத விற்பனை 10 வீதத்தினால் அதிகரித்துள்ளது எனவும் ஸ்டொக்கோம் அமைப்பு தெரிவித்துள்ளது.இக்காலப்பகுதியில் அமெரிக்காவின் ஆயுதவிற்பனை 25 வீதத்தினால் அதிகரித்துள்ளது எனவும் ஸ்டொக்கோம் அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா உலகின் 95 நாடுகளிற்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது இதற்கு அடுத்தபடியாக ரஸ்யா அதிகளவு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது,பிரான்ஸ் ஜேர்மனி சீனாவும் ஆயுத விற்பனையில் ஈடுபட்டுள்ளன இந்த வரிசையில் ஆறாவதாக பிரிட்டன் உள்ளது எனஸ்டொக்கோம் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஓபாமா நிர்வாகம் கைச்சாத்திட்ட ஓப்பந்தங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது 1990ற்கு பின்னர் கடந்த ஐந்து ஆண்டுகளிலேயே அமெரிக்காவின் ஆயுத விற்பனை அதிகரித்துள்ளது என்ற முடிவிற்கு வரமுடிகின்றது என இந்த ஆய்வை மேற்கொண்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒப்பந்தங்கள் காரணமாக எதிர்வரும் காலங்களிலும் அமெரிக்காவே ஆயு விற்பனையில் முன்னனியில் காணப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த ஐந்து வருடங்களில் உக்கிரமான ஆயுதமோதல்களை சந்தித்துள்ள மத்திய கிழக்கு நாடுகளே 32 வீத ஆயுத இறக்குமதியை மேற்கொண்டுள்ளன எனவும் ஸ்டொக்கோம் அமைப்பு தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *