Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆறுமுகன் தொண்டமானின் இறுசடங்கில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் தனிமைப்படுத்தலில்

ஆறுமுகன் தொண்டமானின் இறுசடங்கில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் தனிமைப்படுத்தலில்

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுசடங்கில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவருக்கும் அவருடன் தொடர்பிலிருந்த வாகன சாரதியும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.மலையகத்தை பிரதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர், அவருடன் தொடர்பிலிருந்த வாகன சாரதியும் ஒருவரும் நேற்றைய தினம் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.குறித்த ஊடகவியலாளர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குரிய அறிகுறிகள் காணப்படுவதாகவும் அவரை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதுடன் மூவரையும் 14 நாட்களிற்கு வீடுகளில் தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது என சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்

இதேவேளை பீசீஆர் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொளள்ப்படும் எனவும் மீண்டும் ஒரு முறை பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், அதுவரை அந்த ஊடகவிலாளர் மற்றும் ஏனைய இருவர் ஹட்டன் திம்புல பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *