Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட ஊடகவியலாளருக்கு கொரோனா இல்லை

ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட ஊடகவியலாளருக்கு கொரோனா இல்லை

மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற மூவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, மலையகத்தை ஊடகவியலாளர், அவரது வீட்டில் இருந்தவர் மற்றும் சாரதி ஒருவரும் நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.இந்நிலையில் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட பிராந்திய ஊடகவியலாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என டிக்கோயா வைத்தியசாலை அறிவித்துள்ளது.

குறித்த ஊடகவியலாளர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குரிய அறிகுறிகள் காணப்படுவதாகவும் அவரை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தபட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் அதேவேளை, ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட பிராந்திய ஊடகவியலாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என டிக்கோயா வைத்தியசாலை அறிவித்துள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *