Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா! பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்

ஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா! பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் ஆலோசகராக கடமையாற்றிய அதிகாரியொருவருக்கும் அவரின் பிள்ளைகள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக பரிசோதனைகளின் மூலம் உறுதியாளியுள்ளது.
11 வயது மற்றும் ஒன்றரை வயது பிள்ளைகளுக்கே இவ்வாறாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் 11 வயது பிள்ளைகளின் வகுப்பை சேர்ந்த 70 மாணவர்கள் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 11 வயது பிள்ளை கடந்த 4 , 6 மற்றும் 7ஆம் திகதிகளில் பாடசாலைக்கு சென்றிருந்த நிலையிலேயே அவரின் வகுப்பை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த அதிகாரி அனுராதபுரத்தை சேர்ந்தவர் என்பதுடன் அவர் கடந்த 3 ஆம் திகதி ராஜங்கனை பிரதேசத்தில் மரண சடங்கொன்றில் கலந்துகொண்டுள்ளதாக தெரிய வந்துள்ள நிலையில் அந்த மரண வீட்டில் கலந்துகொண்டிருந்த 230 பேர் வரையிலானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *