Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆவா குழுவை பாதுகாப்பின்றி சந்திக்க தயார் : என்கிறார் வடக்கு ஆளுநர்

ஆவா குழுவை பாதுகாப்பின்றி சந்திக்க தயார் : என்கிறார் வடக்கு ஆளுநர்

எந்தவித பாதுகாப்பும் இன்றி தனியாக ஆவா குழுவினரை சந்தித்து கலந்துரையாடுவதற்கு தான் தயாராக இருப்பதாக வடக்கு மாகாண ஆளுநரான கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
சந்திப்புக்கு தான் தயார் எனவும் இதற்காக அந்த குழுவினருக்கு பகிரங்க அழைப்பை விடுப்பதாகவும் அவர்கள் குறிப்பிடும் எந்தவொரு இடத்திற்கு எந்தவொரு நேரத்திலும் தான் வருவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
ஆவா குழுவினரால் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீதான தாக்குதல் சம்பவத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆவா என்ற பெயரில் செயற்படும் இந்தகுழு வடக்கில் மக்கள் வாழ்க்கையை சீர்குலைப்பதற்கு முயற்சிப்பதற்கான காரணம் என்னவெனவும் அவர்களின் தேவை என்ன என்பது பற்றியும் அறிவதற்காக நேரடியாகவே அவர்களை சந்தித்து கலந்துரையாடுவதற்கு தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *