Search
Sunday 24 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் மீண்டும் ஓர் அகதி தற்கொலை

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் மீண்டும் ஓர் அகதி தற்கொலை

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்திருக்கும் வில்லாவுட் தடுப்பு முகாமில் மீண்டும் ஓர் அகதி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவர் ஈராக்கைச் சேர்ந்தவர் என அகதிகள் நல வழக்கிறஞர் ஐன் ரிண்டோல் தெரிவித்திருக்கிறார். இது இந்த ஆண்டு இம்முகாமில் நடந்த இரண்டாவது மரணம் எனப்படுகின்றது. 

இதனை உறுதிப்படுத்தும் விதமாக தடுப்பில் வைக்கப்பட்டுள்ள ஓர் ஆண் கைதி மரணமடைந்துள்ளதாகஆஸ்திரேலிய எல்லைப்படை தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்று தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள அகதிகள் கடுமையான மனநல பாதிப்பில் உள்ளதாக மனித உரிமை அமைப்புகள தொடர்ந்து கவலை வெளியிட்டு வருகின்றது. இதே போன்று, கடந்த ஜனவரி 25 அன்று சியாரா லியோனைச் சேர்ந்த அகதி ஒருவரும் மரணமடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *