தலைப்பு செய்திகள்

இடைக்கால நிவாரணம் இழப்பீடு அல்ல: யாழில் சுமந்திரன்

இடைக்கால நிவாரணம் இழப்பீடு அல்ல: யாழில் சுமந்திரன்

காணாமல் போனோர் விசாரணை நிறைவடையும் வரை, வாழ்வதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது அன்றும் அதற்கு அமையவே இடைக்கால நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இது “இழப்பீடாக அமையாது” என தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், இடைக்கால நிவாரணம் தொடர்பாக ஊடவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த போதே சுமந்திரன் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

இடைக்கால நிவாரணத்தை இழப்பீடாக மக்கள் கருதவேண்டிய அவசியமே இல்லையென குறிப்பிட்ட சுமந்திரன், குறித்த நிவாரணம் வழங்கப்படும் காலத்தில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் தொடருமென தெரிவித்தார். அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாதென அவர் மேலும் தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *