தலைப்பு செய்திகள்

இத்தாலி டஸ்கனில் உள்ள புகழ்பெற்ற ரிசார்ட்டில் விராட் கோலி – அனுஷ்கா சர்மா திருமணம்

இத்தாலி டஸ்கனில் உள்ள புகழ்பெற்ற ரிசார்ட்டில் விராட் கோலி – அனுஷ்கா சர்மா திருமணம்
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராகவும், கேப்டனாகவும் செயல்படுபவர் விராட் கோலி. இவர் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக இணைந்து பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இதனால் அவர்கள் காதல் உறுதி செய்யப்பட்டது.
இந்தியா – இலங்கை இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர் முடிந்தவுடன் இந்தியா – தென்ஆப்பிரிக்கா தொடர் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி வருகிற 27-ந்தேதி நள்ளிரவு இந்தியாவில் இருந்து புறப்படுகிறது.
டெல்லியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் கடந்த 6-ந்தேதி முடிவடைந்தது. அதில் இருந்து கோலிக்கு சுமார் 20 நாட்கள் வரை ஓய்வு உள்ளது. இந்த நேரத்தில் அவருக்கும் அனுஷ்கா சர்மாவிற்கும் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது.
தற்போது அந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் திருமணம் எங்கு வைத்து நடக்கும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. திருமணம் என்ற செய்தி வந்ததும் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் வைத்து திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது.
ஒவ்வொரு பத்திரிகைகளும் எந்த இடம் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டின. இதற்கான முழு முயற்சிகளையும் செய்து வந்தனர். இந்நிலையில் இத்தாலி நாட்டின் டஸ்கனில் உள்ள புகழ்பெற்ற ரிசார்ட்டில் திருமணம் நடைபெறுவதாக ஒரு ஆங்கிலப்பத்திரிகை செய்து வெளியிட்டு, உறுதிப்படுத்தப்பட்ட செய்தி என்று வெளியிட்டுள்ளது.
விராட் கோலி – அனுஷ்கா சர்மா திருணம் பஞ்சாபி முறையில் நடைபெறும் எனவும், திருமணம் அடுத்த வாரம் நடைபெற இருப்பதாகவும், திருமணம் முடிந்து டெல்லியில் வருகிற 26-ந்தேதி வரவேற்பு விழா நடதப்பபடும் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
n10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *