Search
Friday 7 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா- 671 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா- 671 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் 10,38,716 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 671 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,273 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 6,53,751 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,58,692 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *