Search
Thursday 1 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,601 பேருக்கு கொரோனா தொற்று -உயிரிழப்பு என்னிக்கை 871

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,601 பேருக்கு கொரோனா தொற்று -உயிரிழப்பு என்னிக்கை 871

இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி 62,064 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இன்று கடந்த 24 மணி நேரத்தில் 53,601 ஆக குறைந்துள்ளது. நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர். இன்று பலி எண்ணிக்கை 871 ஆக குறைந்துள்ளது.இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,68,675 ஆக உயர்ந்துள்ளது. 15,83,489 பேர் குணமடைந்துள்ள நிலையில், 45,257 பேர் உயிரிழந்துள்ளனர்.குணமடைந்தவர்களின் சதவீதம் 69.80 ஆக உள்ள நிலையில், 28.21 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு விகிதம் 1.99 சதவீதமாக குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்புகளுக்கு இதுவரை 6 லட்சத்து 39 ஆயிரத்து 929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 15 லட்சத்து 83 ஆயிரத்து 490 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 871 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 44,386ல் இருந்து 45,257 ஆக உயர்வடைந்துள்ளது என தெரிவித்து உள்ளது.இந்தியாவில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்திற்கு மேல் உறுதியான நிலையில், இன்று இந்த எண்ணிக்கை 53 ஆயிரம் என்ற அளவில் குறைந்து உள்ளது. இதேபோன்று பலி எண்ணிக்கை நேற்றுடன் (1,007 பேர்) ஒப்பிடும்பொழுது இன்று குறைந்து உள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *