Search
Thursday 14 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இந்தியாவுக்கு அருகாமையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவதை நான் வரவேற்கிறேன்-இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்

இந்தியாவுக்கு அருகாமையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவதை நான் வரவேற்கிறேன்-இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் நேற்று உத்தியோகப்பூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டது.அத்தோடு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் தென் இந்தியாவுக்கும் இடையேயான பயணிகள் விமான சேவை நவம்பர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் சென்னையில் இருந்து வாரத்தில் ஏழு சேவைகளை நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்த இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் “இந்தியாவுக்கு இன்னும் அருகாமையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவதை நான் வரவேற்கிறேன்.சென்னை- யாழ்ப்பாணம் இடையே முதல் விமான சேவையைத் துவங்கிய ஏர் இந்தியாவின் அலையன்ஸ் விமான நிறுவனத்திற்கு வாழ்த்துகள். இது ஒரு வரலாற்றுத் தருணம்.” என பதிவிட்டுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *