செய்திகள்

இந்தியா மீது எங்களுக்கு முழு நம்பிக்கை- தமிழரசுக் கட்சியின் மத்திய கூட்டத்தில் தீர்மானம்

தமிழரசுக் கட்சியின் மாநாடு யாழ். மார்ட்டின் வீதியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று இரவு பரபரப்பான நிலையில் இடமபெற்றது. சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிறிதரன் எம்.பி. தவிர்ந்த மற்றயவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.இந்தக் கூட்டத்தில் சர்வதேசம் மற்றும் இந்தியாவின் ஆதரவுடன் இனப்பிரச்சினைக்குத் தீர்வு” என்ற வாசகம் அடங்கிய பிரேரணை ஒன்றின் நகல் வடிவத்தை மாவை சேனாதிராசா சமர்ப்பித்தார்.

அப்போது,“ இந்தியாவின் ஆதரவுடன் தீர்வு முயற்சி என்கிறீர்கள். இங்கு எமது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தியாவைக் காட்டமாகத் தாக்கி பகிரங்கப் பேட்டி அளிக்கின்றார். அப்படியா னால் கட்சியின் நிலைப்பாடு என்ன?” என்று கேள்வி எழுப்பினார் சுமந்திரன்.

உடனே சரவணபவன் எம்.பி. தாம் இந்தியாவைத் தாக்கிப் பேட்டியளிக்கவில்லை என்றும் – தமது பேட்டியின் ஒரு பகுதியை மட்டும் ஒளிபரப்பி அந்த ஊடகம் அதைத் திரிவுபடுத்தி விட்டது என்றும் -இந்தியாவின் நியாயமான பங்களிப்பை தாமும் எதிர்பார்க்கின்றார் என்றும் விளக்கமளித்தார்.

இதையடுத்து, அப்படி என்றால் இந்தியா மீது எங்களுக்கு எங்களின் கட்சிக்கு முழு நம்பிக்கை இருப்பதை உறுதிப்படுத்தி ஒரு தீர்மானத்தை இன்று மத்திய குழுக் கூட்டத்தில் நிறைவேற்றி இந்தியாவுக்கு அனுப்பி வைப்போமே என சுமந்திரன் யோசனை தெரிவித்தார்.அதற்கு சரவணபவன் எம்.பியும் ஆதர வளித்தார். அவரது பூரண இசை வோடு இந்தியா மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் நேற்று கட்சியின் மத்திய குழுவினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட் டது. அது இந்தியத்தரப்புக்கும் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இந்தியா தொடர்பாக தெரிவித்த கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்தியா மீது முழு நம்பிக்கை வைப்பதான தீர்மானம் ஒன்று நேற்று இரவு தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் பிரதி இந்திய அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.(15)