Search
Sunday 24 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இந்தியா வந்தார் விங் கமாண்டர் அபிநந்தன்

இந்தியா வந்தார் விங் கமாண்டர் அபிநந்தன்

பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் வெள்ளிக்கிழமை இரவு 9.23 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்தார்.

அபிநந்தன் வருகையையடுத்து அமிர்தசரஸ் துணை போலீஸ் ஆணையர் ஷிவ் துளர் சிங் திலோன் செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்திய எல்லைக்குள் நுழைந்தவுடன் அபிநந்தன் என்ன கூறினார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அவர், “அபிநந்தன் ஏதும் பேசவில்லை. புன்னகைத்தார். அவ்வளவுதான். நாடு திரும்பியதில் மகிழ்ச்சி என்றார். அவர் கண்களில் மகிழ்ச்சி தெரிந்தது” என்றார்

“வாகா எல்லைக் கதவுகள் பொதுவாக மாலை 6 மணிக்கு மூடப்படும். ஆனால், இன்று அபிநந்தனின் வருகைக்காக இரவு வரை திறந்து வைக்கப்பட்டது. அவரை இந்திய விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல் அழைத்துச் சென்றுள்ளார். அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்” என்றும் துளர் சிங் திலோன் கூறினார்.

விமானம் மூலம் அபிநந்தன் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என்றும் திலோன் குறிப்பிட்டார்.

அபிநந்தனை விடுவிக்க ஏன் இவ்வளவு தாமதம் என்று பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இந்தியா கேட்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அபிநந்தனை ஒப்படைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏர் வைஸ் மார்ஷல் ஆர் ஜி கே கபூர், “பாகிஸ்தான் அவரை ஒப்படைத்ததில் மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.

அபிநந்தன் இந்தியாவுடன் ஒப்படைக்கப்பட்டவுன் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் அபிநத்தன் பேசும் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்ந்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. பிபிசி தமிழ்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *