தலைப்பு செய்திகள்

இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்தும் தீர்மானம் மிக்க போட்டி இன்று

இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்தும் தீர்மானம் மிக்க போட்டி இன்று

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்றைய தினம் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி 7 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை என்ற அடிப்படையில் 11 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காமல் இருந்த இந்திய அணி இதே ஆடுகளத்தில் (பர்மிங்காம்) நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் வீழ்ந்து முதல் தோல்வி கண்டது.
பங்களாதேஷ் அணி 3 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 7 புள்ளிகள் பெற்றுள்ளது. எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் பங்காளதேஷ் அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும். எனவே அந்த அணிக்கு இந்த ஆட்டம் தீர்மானம் மிக்கதாக இருக்கும் இதில் தோற்றால் அந்த அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து விடும்.
அதேபோன்று இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி உறுதி செய்து விடும் என்பதால் தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தி விளையாடும். என எதிர்பார்க்கப்படுகின்றது. -(3)2


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *