Search
Friday 13 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இந்திய அணியுடன் தோற்ற விதத்தினால் கடும் வேதனை அடைந்துள்ளேன்

இந்திய அணியுடன் தோற்ற விதத்தினால் கடும் வேதனை அடைந்துள்ளேன்

இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை 3-0 என்ற அடிப்படையில் இழந்ததால் நான் கடும் வேதனை அடைந்துள்ளேன் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத்ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.
உள்ளுரில் தொடரை இழப்பது எப்போதும் வேதனை அளிக்கும் விடயம் அதிலும் இவ்வாறு தோற்பது கடும் வேதனையை அளித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் உள்ளுர்pல் இந்தியாவிற்கு எதிராக சிறப்பாக விளையாடியுள்ளோம் என தெரிவித்துள்ள அவர் தற்போதைய நிலையிலிருந்து மீள்வதற்கான வழிமுறையை கண்டுபிடிக்கவேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணியினர் தற்போது நம்பிக்கையிழந்த நிலையில் உள்ளனர் நாங்கள் அவர்களிற்கு ஆதரவளித்து அவர்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ள ஜெயசூர்யா எனினும் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணவேண்டியது அணி வீரர்களே எனவும் குறிப்பிட்டுள்ள அவர் மிகவிரைவில் அவர்கள் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழிமுறையை கண்டுபிடிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
செம்டம்பர் மாதம் பாக்கிஸ்தான் அணிக்கு எதிரான தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கை அணிக்கு தலைமைபயிற்றுவிப்பாளர் ஓருவர் நியமிக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *