Search
Sunday 20 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் டில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிந்தியில் பதிவிட்டுள்ளதாவது :’கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளைப் பெற்றவுடன், சோதனை செய்து பார்த்தேன். பரிசோதனை அறிக்கை மீண்டும் நேர்மறையாக வந்தது. எனது உடல்நிலை நன்றாக உள்ளது, ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தயவுசெய்து உங்களை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’ இவ்வாறு அதில் கூறியுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *