Search
Friday 19 October 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இந்து கலாச்சார அமைச்சுக்கு ஓர் இந்துவை நியமித்திருக்காலம்-சிவாஜிலிங்கம் ஆதங்கம்

இந்து கலாச்சார அமைச்சுக்கு ஓர் இந்துவை நியமித்திருக்காலம்-சிவாஜிலிங்கம் ஆதங்கம்
  1. வடக்கு மாகாண சபையின் 124 ஆவது அமர்வு கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் சபைத் தவலைர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.இதன்போது ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட செயலணிகள் தொடர்பாக உரையாற்றிக்கொண்டிருந்த சிவாஜிலிங்கம் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இந்து கலாச்சார அமைச்சின் பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்து கலாச்சார அமைச்சுக்கு ஓர் இந்துவை நியமித்திருக்காலம். அங்கஜனுக்கோ அல்லது விஜயகலாவுக்கோ மாற்றிக் கொடுத்திருக்கலாம். மஸ்தானுக்கு வேறு ஒரு பிரதி அமைச்சினைக் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என தெரிவித்தார்.
  2. ஜனாதிபதி சித்த பிரமை பிடித்தவர்கள்போல் செயற்படுகிறார்கள். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இந்து கலாச்சார அமைச்சின் பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளமையினால் இது தெளிவாகிறது.இந்த நாடு சகல இனங்களுக்கும் மதங்களுக்கும் எல்லோருக்கும் பொது என சொல்லிக்கொண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர் தாயகங்களில் நடைபெற்ற பிரச்சினைக்குப் பின்னர் சகல இனமக்களும் இடம்பெயர்ந்தார்கள்.
  3. ஆகவே அனைத்து மக்களும் மீண்டும் மீள்குடியேற்றப்பட வேண்டும். இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தபோதும் அதனைத் தெரிவித்திரந்தார்.ஜனாபதியும் பிரதமரும் தமது கொள்கைகளை சரியாக நடைமுறைப்படுத்துவார்களானால் இடம்பெயர் செயலணியை முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கு மட்டும் கொடுக்காமல் மூன்று இனத்தவர்களையும் இணைத்து இருக்கலாம்.
  4. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இந்து கலாச்சார அமைச்சின் பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதி அமைச்சர்காளாக தெரிவு செய்வது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. மீள் குடியேற்றம் அனைத்து மக்களுக்கும் தான் உரியது. சிங்கள மக்களையும், முஸ்லிம் மக்களையும் தான் குடியேற்றப் போகின்றீர்கள் என்று சொல்லுங்கள். நாங்கள் எங்களுக்கு தெரிந்த தீர்மானத்தை எடுக்கின்றோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *