Search
Wednesday 24 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இந்த வாரத்திற்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம்?

இந்த வாரத்திற்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம்?

இந்த வார இறுதியில் போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் தூக்கிலிடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவெற்ற வேண்டுமென்ற உறுதியான நிலைப்பாட்டில் இருக்கும் ஜனாதிபதி அதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளதாகவும் இதன்படி இந்த வார இறுதிக்குள் தூக்குத் தண்டனை கைதிகளில் இரண்டு பேர் முதற் கட்டமாக தூக்கிலிடப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாரம் முழுவதும் போதைப் பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 1ஆம் திகதி அது தொடர்பான இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னர் தூக்கு தண்டனை நிறைவெற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் இதனை அனுமதிக்க முடியாது எனவும் சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *