Search
Monday 26 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இனவாத ஆயுத மோதலை நோக்கி நாடு நகர்ந்து வருகிறது-ஐக்கிய நாடுகள் சபை

இனவாத ஆயுத மோதலை நோக்கி நாடு நகர்ந்து வருகிறது-ஐக்கிய நாடுகள் சபை

இனப்படுகொலைகளை தடுப்பதற்கான ஐ.நா.வின் சிறப்பு ஆலோசகர் அதாமா டெய்ங் மற்றும் இலங்கையின் மத சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஐ.நா. சிறப்பு ஆலோசகர் கறென் ஸ்மித் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இனவாத ஆயுத மோதலை நோக்கி நாடு நகர்ந்து வருகிறது. இது நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கி தள்ளும். எனவே, இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் நிலைமை மோசமடையும் சாத்தியம் காணப்படுகிறது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இனப்படுகொலைகளை தடுப்பதற்கான ஐ.நா.வின் சிறப்பு ஆலோசகர் அதாமா டெய்ங் மற்றும் இலங்கையின் மத சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஐ.நா. சிறப்பு ஆலோசகர் கறென் ஸ்மித் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது நாட்டின் அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டதற்கமைய தமது மதத்தை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு அனைத்து சமூகத்தினருக்கும் உரிமை உண்டு. அதற்கமைய இலங்கையர் என்ற அடிப்படையில் அனைவரும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அண்மைக்கால வன்முறைகள் ஆசிய பிராந்தியத்தில் தேசியவாத மற்றும் தீவிரவாத கருத்துக்களை அதிகரிக்க செய்துள்ளதுடன், மத சிறுபான்மையினரை ஆபத்தில் தள்ளியுள்ளது என ஐ.நா.வின் சிறப்பு ஆலோசகர் அதாமா டெய்ங் மற்றும் இலங்கையின் மத சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஐ.நா. சிறப்பு ஆலோசகர் கறென் ஸ்மித் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *