Search
Thursday 9 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இன்றும் நாளையும் நாடு பூராகவும் விசேட நடவடிக்கை

இன்றும் நாளையும் நாடு பூராகவும் விசேட நடவடிக்கை

இன்றும் நாளையும் நாடுபூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த காலப்பகுதியில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 10 மணி முதல் நாளை மறுதினம் சனிக்கிழமை அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாளைய தினம் பொசன் போயா தினம் என்பதனால் விசேட சோதனை நடவடிக்கைகள் நடத்தப்படவுள்ளன.
வீதிச் சோதனை சாவடிகள் , ரோந்து நடவடிக்கைகள் மூலம் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஊரடங்கு சட்ட அனுமதி இன்றி வெளியில் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி இதனை மீறி நடந்துகொள்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *