Search
Monday 16 September 2019
  • :
  • :

இன்று உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம்

இன்று உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம்

உலகம் முழுவதும் இன்று உலக தற்கொலை தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் நிலையில், உலக சுகாதார நிறுவனமான WHO, தற்கொலைகளைத் தடுக்க மக்கள் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.வாழ்க்கையில் துன்பங்களை கண்டு துவண்டு விடாமல், எதிர்த்து நின்று போராட வேண்டும். அதற்குப் பதிலாக தற்கொலை என்ற பெயரில் உயிரை மாய்த்துக் கொள்வது கோழைத்தனமான செயல். பிரச்னைகள் இல்லாதவர்களே உலகில் இல்லை. ஒவ்வொரு பிரச்னைக்கும் அதற்கான தீர்வுகளும் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். பிரச்னைக்கு தீர்வு தற்கொலை தான் என எண்ணினால், உலகில் யாரும் இருக்க மாட்டார்கள்.

உலகளாவிய ரீதியில் 40 விநாடிகளுக்கு ஒரு முறை என்ற ரீதியில் 3 000 நபர்கள் தினமும் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. பெண்களை விட இரண்டு மடங்கு ஆண்கள்தான் தற்கொலை செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என அறியப்பட்டுள்ளது. மன அழுத்தம், குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, நிதிச் சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணங்கள் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம். பொதுவாக, தற்கொலை கடவுளுக்கு எதிரான செயலாக கருதப்படுகிறது.September-10th-World-Suicide-Prevention-Day-Text-Hand-Picture

பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு தற்கொலை என தவறாக சிந்திக்கின்றனர். இதனால் அவரை சார்ந்திருப்பவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என அறிவதில்லை. தற்கொலை அறவே கூடாது என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, செப்., 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

உலகளவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். 40 நிமிடத்துக்கு ஒருவர் தற்கொலை செய்கிறார் என உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. கல்வியில் சாதிக்க முடியாத விரக்தியில் மாணவர்கள், வரதட்சனை, பாலியல் உள்ளிட்ட கொடுமைகளால் பெண்களும், வறுமை, கடன் உள்ளிட்ட பிரச்னைகளால் ஆண்களும்; வேலையில் தொந்தரவு, காதல் தோல்வி போன்ற காரணங்களுக்காக இளைஞர்களும் தற்கொலைக்கு முயல்கின்றனர். பிரச்னைகளை சந்திக்கும் பக்குவத்தை பெற்று விட்டால், தற்கொலை எண்ணம் தலை துாக்காது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *