தலைப்பு செய்திகள்

இன்று சர்வகட்சி கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு

இன்று  சர்வகட்சி கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு

நாளைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையிலேயே இன்றைய தினம் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி சந்திக்கின்றார்.ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, இலங்கை தமிழரசுக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. ஆகிய நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சபாநாயகரும் இதில் கலந்துகொள்ளவுள்ளார்.

அரசியல் நெருக்கடி உச்சம் தொட்டுள்ள நிலையில், கட்சிகளுக்கிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் சர்வகட்சி கூட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *