Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இரண்டாவது அலை இன்னும் உருவாகவில்லை

இரண்டாவது அலை இன்னும் உருவாகவில்லை

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதை கொரோனா பரவலின் இரண்டாவது அலையாக குறிப்பிட முடியாது என தொற்றுநோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் கொரோனா தொற்று நிலைமை தொடர்பாக மக்கள் எப்போதும் அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும் என அந்த ஆய்வு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போது அடையாளம் காணப்படுபவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை அடையாளம் அவர்களை தனிமைப்படுத்தி முறையான நடவடிக்கையெடுத்தால் தற்போது மெலெழும் கொரோனாவை கட்டுப்படுத்தி விட முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *