Search
Thursday 12 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இரண்டாவது டெஸ்டில் வெற்றிபெற முடியும் சந்திமல் நம்பிக்கை

இரண்டாவது டெஸ்டில் வெற்றிபெற முடியும் சந்திமல் நம்பிக்கை

கொழும்பு எஸ்எஸ் சி மைதானத்தில் நாளை ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியை தோற்கடிக்ககூடிய பலமுள்ள அணி தன்னிடமுள்ளதாக இலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமல் தெரிவித்துள்ளார்
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்
நாங்கள் முதல் டெஸ்ட்போட்டியில் செய்த தவறுகளை மறக்க விரும்புகி;ன்றோம் முதல் போட்டியின் மூலம் பெற்றுக்கொண்ட சாதகமான விடயங்களுடன் இரண்டாவது டெஸ்ட்டை விளையாடப்போகின்றோம்,
கடந்த மூன்று நாட்களாக நாங்கள் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டோம் அனைத்து வீரர்களும் சிறந்த நிலையில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறவேண்டும் என்ற எண்ணத்துடனேயே நான் விளையாடுகின்றேன் என்னிடம் அந்த உறுதிப்பாடு உள்ளது அதற்கான அணியும் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இடதுகைசுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஸ்பகுமார நாளைய டெஸ்டில் விளையாடுவார் எனவும் சந்திமல் தெரிவித்துள்ளார்.
ரங்கனஹேரத் ஓரு மிகப்பெரும் சாதனையாளர் கடந்த ஏழு எட்டு வருடங்களாக அவர் அணிக்கு வெற்றிகளை பெற்றுத்தருபவராக விளங்குகின்றார் அவருடன் மலிந்த இணைந்து விளையாடினால் அவர் தனது அனுபவத்தை மலிந்தவுடன் பகிர்ந்துகொள்வார்,
அனேகமாக மலிந்த அணிக்குள் வருவார் அசேலவிற்கு பதில் தனஞ்செய விளையாடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.நாங்கள் இதனையே எதிர்பார்க்கின்றோம்,இது மலிந்த புஸ்பகுமாரவிற்கு சிறந்த வாய்ப்பாகவும் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடப்போகின்றார்கள் என நான் கருதுகின்றேன் எனவும் சந்திமல் தெரிவித்துள்ளார்.
ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமானது போன்று தோற்றமளிக்கின்றது இரண்டாவது நாளில் இருந்து பந்து சுழலும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *