Search
Tuesday 23 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இராணுவ தளபதி தெரிவுக்குழு முன் சாட்சியமளித்து கூறியவை

இராணுவ தளபதி தெரிவுக்குழு முன் சாட்சியமளித்து கூறியவை

நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றாக நீங்கிவிட்டது என கூற முடியாது எனவும் எவ்வாறாயினும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் தாம் தொடர்ந்தும் அவதானத்துடனேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடவடிக்கைகளுக்கு யாரும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இவ்வேளையில் இவரிடம் ரிஸாத் பதியூதின் அமைச்சராக இருந்த போது கைது செய்யப்பட்ட ஒருவர் தொடர்பாக இராணுவத் தளபதியுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய விடயம் தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டிருந்தது. ஏப்ரல் 26ஆம் திகதி இஷான் அஹமட் என்பவர் தெஹிவளை பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார். எனவும் அவர் தொடர்பாகவே ரிஸாத் பதியூதின் கேட்டதாகவும் ஆனால் அவ்வாறாக எந்த அழுத்தத்தையும் மேற்கொள்ளவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது எனக்கு அமைச்சர் ரிஷாத் பதியூதின் தொலைபேசி அழைப்பை எடுத்தார். எனது தொலைபேசி இலகத்தை சகலரும் அறிவார்கள். அமைச்சர்கள் , எம்.பிக்கள் உள்ளிட்டோரும் கதைப்பார்கள். இதன்படி அவரும் கதைத்துள்ளார். குறித்த தினத்தில் அந்த நபரின் பெயரை குறிப்பிட்டு அவரை கைது செய்யதீர்களா கேட்டார். அது பற்றி எனக்கு தெரியாது நான் ஆராய்ந்து கூறுவதாக கூறினேன். பின்னர் இராண்டாவது தடவையாகவும் கேட்ட போது இன்னும் தேடுவதாக கூறியிருந்தேன். இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களிடம் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளரா என கேட்டேன். பின்னர் கேட்ட போது அவர் கைது செய்யப்பட்டிருந்மை தொடர்பாக உறுதியாகியிருந்தது. அப்போது இது பற்றி இன்னும் ஒன்றரை வருடங்களின் பின்னரே இனி தொலைபேசி அழைப்பை எடுக்க வேண்டுமென கூறியிருந்தேன். பயங்கரவாத தடுப்பு பிரிவில் அவரை ஒன்றரை வருடங்களுக்கும் விசாரணைக்காக வைத்திருக்க முடியும்;. என்ற காரணத்திற்காகவே நான் அவ்வாறு கூறியிருந்தேன். எவ்வாறாயினும் அவர் எனக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை. கோரிக்கையையே செய்திருந்தார். தனது அமைச்சில் பணியாற்றும் உயர் அதிகாரியின் மகன் என்பதனால் அது தொடர்பாக ஆராய்ந்து பார்க்குமாறே கூறியிருந்தார். என்றார்.
அத்துடன் ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக குறிப்பிட்ட இராணுவ தளபதி , தாங்கள் தற்போது சர்வதேச பயங்கரவாதத்திற்கே முகங்கொடுத்து வருகின்றோம்.இப்போது இந்த பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியுள்ளோம். ஆனால் இந்த பயங்கரவாதம் முற்றாக முடிந்துவிட்டது என்ற வார்த்தையை எம்மால் கூற முடியாது. சாய்ந்தமருது சம்பவத்தின் பின்னர் நிலைமைகளை கட்டுபடுத்த முடிந்த போதும் நிலைமை 100 வீதம் கட்டுப்பாட்டில் உள்ளது என கூற முடியாது. நீண்டகால திட்டங்களில் இது நடக்கலாம். இனியும் எவருக்கும் தேவை இருப்பின் மீண்டும் தாக்குதல் நடக்கலாம். விடுதலைப்புலிகளை கூட நாம் இன்னமும் தேடுக்கொண்டுதான் உள்ளோம். என தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *