Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இரு லெக்ஸ்பின்னர்கள் அணியில் விளையாடுவது இ;ந்தியாவை வலுப்படுத்தியுள்ளது- தென்னாபிரிக்காவின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் கருத்து

இரு லெக்ஸ்பின்னர்கள் அணியில் விளையாடுவது  இ;ந்தியாவை வலுப்படுத்தியுள்ளது-  தென்னாபிரிக்காவின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் கருத்து

இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் சகால் மற்றும்குல்தீப் யாதவை அணிக்காக போட்டிகளை வென்றுகொடுக்கக்கூடியவர்கள் என தென்னாபிரிக்க அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் போல் அடம்ஸ் பாராட்டியுள்ளார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரு சுழற்பந்துவீச்சாளர்களும் மிகச்சிறப்பாக பந்துவீசியுள்ள நிலையிலேயே போல் அடம்ஸ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
சமீபகாலங்களில் கிரிக்கெட் போட்டிகள் துடுப்பாட்ட வீரர்களிற்கு சாதகமாக மாறியுள்ளன இதனடிப்படையில் பார்க்கும்போது இந்த இரு வீரர்களையும் அணியில் சேர்த்துக்கொள்ள கூடிய நிலைமை இந்திய அணிக்கு உள்ளது சிறந்த விடயம்.
பல அணிகளால் சில வேளைகளில் சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்துக்கொள்ள முடியாத நிலைகாணப்படுகின்றது ஆனால் இந்திய அணியின் சமநிலை காரணமாக அந்த அணியால் இருவரையும் பயன்படுத்த முடிகின்றது.
இதுவே இந்திய அணிக்கு உள்ள சாதக தன்மையாகும்.
தென்னாபிரிக்காவில் அவர்கள் தங்கள் பந்துகளின் வேகத்தை குறைத்து வீசியதே அவர்களின் வெற்றிக்கு காரணம்.அவர்கள் இதற்கு முன்னர் தென்னாபிரிக்காவில் விளையாடியதில்லை ஆனால் ஆடுகளங்களை பார்த்தவுடன் அவர்கள் தங்கள் வேகத்தை குறைக்கவேண்டிதை உணர்ந்துகொண்டனர்.

அவர்கள் லெக்ஸ்பின்னர்கள் என்றாலும் வித்தியாசமானவர்கள் அவர்களால் பந்தை துடுப்பாட்ட வீரரிடமிருந்து வெளியே எடுக்க முடியும்
அவர்கள் வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு பந்துகளை வீசுகின்றனர் இதனால் ஆபத்தானவர்களாக காணப்படுகின்றனர்
சாகல் தொடர்;ச்சியாக ஓரே மாதிரி பந்துவீசுகின்றார் குல்தீப்பின் கூக்லி பந்துகளை விளையாடுவது கடினம் எனவும் போல் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *