Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இறுதிக் கட்ட யுத்தத்தில் கடைசி இரண்டு வாரங்களில் நடந்தது : ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

இறுதிக் கட்ட யுத்தத்தில் கடைசி இரண்டு வாரங்களில் நடந்தது :  ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

இறுதி யுத்தத்தின் கடைசி இரண்டு வாரங்களில் ஜனாதிபதியோ , பிரதமரோ , பாதுகாப்பு செயலாளரோ அல்லது இராணுவ தளபதியோ நாட்டில் இருக்கவில்லையெனவும் அவர்கள் கொழும்பின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு பயந்து வெளிநாடுகளுக்கு சென்றிருந்தாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த காலப் பகுதியில் தானே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர செயற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.பேரவையின் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி, நியூயோர்க்கில் உள்ள இலங்கையர்களை சந்தித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளையில் கடைசி இரண்டு வாரங்களில் ஜனாதிபதியோ , பிரதமரோ , பாதுகாப்பு செயலாளரோ அல்லது இராணுவ தளபதியோ நாட்டில் இருக்கவில்லை அனைவரும் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார்கள். போரின் முக்கிய கட்டத்தில் இவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறியது ஏன் என்று யாருக்கும் தெரியாது, எனக்கு மாத்திரம் தான் அது தெரியும். அவ்வேளையில் விடுதலைப்புலிகள் தலைநகர் கொழும்பை விமான உதவியுடன் தாக்குவதற்கு திட்டம் தீட்டியிருந்தார்கள்.அதனால் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் தலைமறைவா கினர்.இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் இறுதி யுத்தத்தின் இறுதி இரண்டு வாரங்களையும் பதில் பாதுகாப்பமைச்சர் என்ற ரீதியில் நான் அதனை கையிலெடுத்து முன்னெடுத்து சென்றேன். எனவே நான் முன்னின்று நடத்திய இறுதி யுத்தத்தின் இறுதி இரண்டுவாரங்களில் போர்க்களத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு மாத்திரமே தெரியும்.என்னுடைய தலைமையின் கீழ் நடந்த அந்த இறுதிப்போரில் படையினர் எந்த குற்றங்களையும் செய்யவில்லை.அவர்கள் போர் விதிமுறைகளை மீறாமல் அந்த போரை நடத்தி வெற்றியை பெற்றுத்தந்தார்கள். என அவர் தெரிவித்துள்ளார். -(3)42513279_10156450786106327_3633361978149306368_n


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *