Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இறுதி நேரத்தில் கைவிடப்பட்ட சூழ்ச்சி!

இறுதி நேரத்தில் கைவிடப்பட்ட சூழ்ச்சி!

ஐ.தே.கவின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிப்பதற்காக முயற்சிகள் இடம்பெற்ற போதும் இறுதி நேரத்தில் அந்த திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நேற்று இரவு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த போதும் போதுமான பெரும்பான்மையை காட்ட முடியாத நிலைமையால் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
எழுத்து மூலம் 113ற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக இருப்பதாக கையெழுத்திட்டு தனக்கு அறிவித்தால் எவ்வேளையிலும் அவரை பிரதமராக நியமிக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி அவர்களுக்கு அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் நேற்று இரவு அவர்களால் அந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது போனதால் கைவிடப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *