Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கைக்குள்ளும் ஊடுருவிய வெட்டுக்கிளிகள் படை : விவசாயிகள் அச்சத்தில்

இலங்கைக்குள்ளும் ஊடுருவிய வெட்டுக்கிளிகள் படை : விவசாயிகள் அச்சத்தில்

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் விவசாயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் பாலைவன வெட்டுக்கிளி படை தற்போது இலங்கைக்குள்ளும் ஊடுருவியுள்ளது.
குருநாகலில் பல பிரதேசங்களில் தற்போது இந்த வெட்டுகிளிகள் விவசாய நிலங்களுக்குள் பயிர்களை அழித்து வருவதாக அங்குள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறாக வெட்டுக்கிளிகள் நாடு பூராகவும் பரவினால் விவசாய துறை பெரும் அனர்த்தங்களை சந்திக்க நேரிடுமென விவசாயிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி முதல் இந்தியாவில் தொடங்கிய வெட்டுக்கிளிகள் ஊடுருவல், தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின், 20 மாவட்டங்களில் பரவியுள்ளன. கடந்த வருடம் 12 மாவட்டங்களில் மட்டும் பாதித்த நிலையில், இந்த ஆண்டு அங்கு அதன் பரவல் அதிகமாக உள்ள நிலையில், தற்போது இலங்கையிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
வெட்டுக்கிளிகள் வகைகளில் ஒன்றுதான் இந்த பாலைவன வெட்டுக்கிளி. தனிமையில்தான் வழக்கமாக வாழும், முட்டையில் இருந்து இளம் பூச்சியாக உருவாகி, பின்னர் தத்தத்தாவி ஒரு வழியாக பறக்கத் துவங்கிவிடும். ஆனால் இதற்கு இரண்டு முகம் உண்டு.
சுற்றுச்சூழல் சிக்கல்களால் பசுமை வெளிகள் குறையும் சமயத்தில் உணவின்றி தவிக்கும் பல வெட்டுக்கிளிகள் ஒன்று சேர்ந்துவிடும்.
கூட்டமாகச் சேர்ந்துவிட்டால் தனிமை நிலையில் வாழும் பூச்சி திடீரென கூடி வாழும் சிறிய வேட்டை விலங்குகள் போல மாறிவிடும். அதன் பின்னர் உலகிலேயே மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் புலம் பெயர் பூச்சியாக உருவெடுக்கும். புதிதாக ஒன்றுசேரும் வெட்டுக்கிளிகள் தனது குணத்தை மாற்றிக்கொண்டு, பெரும் பசி கொண்ட கூட்டமாக ஒரு பறந்து செல்லும் படை போல மாறிவிடும். ஒரு பெரும் வெட்டுக்கிளி படையில் 10 பில்லியன் அதாவது ஆயிரம் கோடி வெட்டுக்கிளிகள் வரை கூட இருக்கலாம். ஒருநாளைக்கு 150 முதல் 200 கிமீ வரை பறந்து செல்லும் திறன் இதற்கு உண்டு. பசி வெறியில் இருக்கும் அந்த வெட்டுக் கிளிகள், கிராமப்புற உணவு ஆதாரங்களை, நாசமாக்கிவிட்டு, இனப்பெருக்கம் செய்து கொண்டே செல்லும். இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் பொதுவாக மூன்று மாதம் முதல் ஐந்து மாதம் வரை வாழக்கூடாது. ஆனால் காலநிலை, சுற்றுசூழல் நிலை ஆகியயவற்றை பொறுத்து இது மாறுபடும். பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம் குறுகிய காலகட்டத்தில் இனப்பெருக்கம் செய்து பெரும் படையை உருவாக்கும் திறன் பெற்றது. அதாவது மூன்று மாதங்களில் 20 மடங்காகவும், ஆறே மாதங்களில் 400 மடங்காகவும், ஒன்பது மாதங்களில் 8000 மடங்காக உருவெடுக்கும் திறன் இந்த படைக்கு உண்டு. ஒரு வளர்ந்த பாலைவன வெட்டுக்கிளி ஒருநாளைக்கு தனது எடைக்கு நிகரான எடையை உட்கொள்ளும். அதாவது 2 கிராம் உணவு உட்கொள்ளும்.
ஒரு சிறிய வெட்டுக்கிளி கூட்டத்தை கணக்கில் எடுத்துக்கொள்வோம். அதாவது, ஒரு கிலோ மீட்டர் நீளம் அகலம் உள்ள ஒரு சதுர கிலோமீட்டர் பகுதியில் 8 கோடி வெட்டுக்கிளிகள் வரை இருக்கும். இவை ஒருநாளைக்கு சராசரியாக 35,000 பேர் சாப்பிடக்கூடிய உணவை உட்கொண்டுவிடும்.
இந்த கூட்டத்தை கட்டுப்படுத்தாவிடில் விளை நிலங்கள் நாசமாகும். இதனால் உங்கள் தட்டுக்கு உணவு வராமல் போகலாம். மிகப்பெரிய பஞ்சம் கூட உருவாகலாம். உலகம் சுமார் 90 நாடுகள் வெட்டுக்கிளி படையெடுப்பால் பாதிப்புக்குள்ளாகலாம் என்கிறது ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *