Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கைக்கு கிடைத்த கொரோனா நிதிகள் எங்கே? தகவல் வெளியிட கோருகிறார் ரணில்

இலங்கைக்கு கிடைத்த கொரோனா நிதிகள் எங்கே?  தகவல் வெளியிட கோருகிறார் ரணில்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு வெளிநாடுகள் மற்றும் அமைப்புகளிடமிருந்த கிடைக்கப்பெற்ற நிதி உதவிகள் தொடர்பான தகவல்களை மறைக்காது வெளியிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பு மூலம் இலங்கைக்கு நேரடியாக 1.9 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ள போதும் வெளிநாடுகள் , வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களினால் வழங்கப்பட்ட நிதி உதவிகள் தொடர்பான தகவல்களை வெளியிடாது இருக்கின்றமை பிரச்சினைக்குறியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பாராளுமன்றம் இயங்காது இருக்கும் இந்த நேரத்தில் அரசாங்கம் நிதி விடயங்களில் வெளிப்படை தன்மையும் செயற்பட வேண்டுமெனவும் இதன்படி கிடைக்கப்பெற்ற நிதி உதவிகள் தொடர்பான சரியான தகவல்களை வெளியிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *