Search
Thursday 1 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் மீண்டும் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் மீண்டும் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பொதுத்தேர்தல் கடமைகளில் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஆகியோர் ஈடுபடவுள்ளமையால் வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.குறித்த நடவடிக்கை எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படும். இதன்போது டுபாயிலுள்ள 660 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர் என ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் மீண்டும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.அதனைத் தொடர்ந்து மாலைதீவு, அவுஸ்ரேலியா, கட்டார், ஓமான், பஹ்ரைன், மலேசியா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களையும் நாட்டுக்கு அழைத்துவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *