Search
Saturday 24 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையின் சமூக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா காட்டும் அக்கறைக்கு நன்றி

இலங்கையின் சமூக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா காட்டும் அக்கறைக்கு நன்றி

2 நாள் பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி  மைத்ரிபாலா சிறிசேனா நேற்று இரவு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.  அப்போது, அவருக்கு மோடி விருந்து அளித்தார். அதனை தொடர்ந்து இந்தியா-இலங்கை இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இன்று பிற்பகல் உஜ்ஜைன் நகரின் அருகேயுள்ள நினோரா கிராமத்தில் நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவு விழாவை பிரதமர் மோடியுடன் மைத்ரிபாலா சிறிசேனா கலந்து கொண்டார். அங்குள்ள இலங்கை மகாபோதி சொசைட்டி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, அநகாரிக  தர்மபாலா சிலையை திறந்து வைத்தார். அப்போது  ஜனாதிபதி சிறிசேனா பேசியதாவது:

இரு நாடுகளுக்கு இடையில் பல நூற்றாண்டுகளாக சுமூகமான உறவு இருந்து வருகிறது. எதிர்காலத்தில் இருதரப்பு உறவானது மேலும் வலிமையடையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இலங்கையின் சமூக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா காட்டும் அக்கறைக்கு என் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *