Search
Friday 17 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான தில்லைநாதன் நேற்று காலமானார்.1944 ஆம் ஆண்டு பிறந்த தில்லைநாதன் வீரகேசரி பத்திரிகையின் ஊடாக தனது ஊடக பயணத்தை ஆரம்பித்தவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்திப் பிரிவில் பல வருட காலங்களாக பணியாற்றினார். பல்வேறு ஊடகங்களிலும் பணியாற்றிய காலம் சென்ற தில்லைநாதன் இலங்கை பத்திரிகை பேரவையின் தணிக்கை பிரிவிலும் கடமையாற்றியுள்ளார்.இந்நிலையில் அன்னாரின் பூதவுடல் நாளை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகைத்துறையில் கடமையாற்றி பின்னாளில் இலத்திரனியல் ஊடகத்தில் பிரபலமாகி பின்னர் மீண்டும் அச்சு ஊடகத்துறைக்குத் திரும்பி கோலோச்சிய சிவம் பாக்கியம் தில்லைநாதன் தனது 75 ஆவது வயதில் நேற்று மாலை காலமானார். இவர்உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *