Search
Monday 16 September 2019
  • :
  • :

இலங்கையின் 23ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம்

இலங்கையின் 23ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம்

இலங்கையின் 23ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.இராணுவத் தளபதியாக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருந்தமைக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தன.இறுதிப் போர்க்கால, சர்ச்சைக்குரியவரான அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்படுவது தொடர்பாக இவ்வாறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

மேலும் இந்த தீர்மானம் காரணமாக ஜனாதிபதி சிறிசேன தனது சொந்த கட்சியின் உறுப்பினர்களிடமிருந்தும் எதிர்ப்புகளை எதிர்கொண்டதோடு, ஐ.தே.க.வும் இந்த விவகாரத்தில் முரண்பட்டிருந்தது. இவ்வாறான நிலையிலேயே புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து இராணுவத்தின் புதிய தளபதியை நியமிப்பது தொடர்பாக இழுபறிநிலை ஏற்பட்டிருந்தது.இந்நிலையில் புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *