Search
Saturday 24 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையின் 69 வது சுதந்திரதினம் வவுனியாவில் கொண்டாடப்பட்டது!

இலங்கையின் 69 வது சுதந்திரதினம் வவுனியாவில் கொண்டாடப்பட்டது!

இலங்கையின் 69 வது சுதந்திரதினம் வவுனியாவில் மாவட்ட அரசாஙக அதிபர் எம்.பி. றோகண புஸ்பகுமார தலைமையில் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை 8.30 மணிக்கு நடைபெற்றது. இது வடமாகாணத்தின் பிரதான சுதந்திர தின நிகழ்வாக இடம்பெற்றிருந்தது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆழுநர் றெஜினோல்ட் குரே கலந்துகொண்டு சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் உரையாற்றியிருந்தார்.

இலங்கையின் தேசியக்கொடியை வடக்கு மாகாண ஆளுனர் ஏற்றிவைத்ததுடன் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் மாணவிகள் சிங்கள மொழியில் தேசியகீதத்தை இசைத்ததுடன், வவுனியா மடுக்கந்த மகாவித்தியாலய சிங்கள மாணவர்கள் தேசிய கீதத்தை தமிழில் இசைத்திருந்தனர்.

ஊர்காவல் படை, பொலிஸ் மற்றும் இராணுவசத்தினரின் அணிவகுப்பு நடைபெற்றிருந்தது. நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், மற்றும் அரச திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

DSC_0064 DSC_0065 DSC_0066 (1) DSC_0032 DSC_0033 DSC_0036 (1) DSC_0037 DSC_0050 (2) DSC_0052

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *