Search
Thursday 14 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகளில் முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்புண்டு -சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு

இலங்கையில்  இடம்பெற்ற சித்திரவதைகளில் முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்புண்டு -சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு

இலங்கையின் நீதித்துறையின் மிகப்பெரிய வெற்றிக்கதையாக 11 பேர் கடத்தப்பட்ட விவகாரம் அமைந்திருக்கவேண்டும் என தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா ஆனால் இது தோல்வியின் அடையாளமாக மாறிவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.இலங்கை கடற்படையினரின் பல இரகசிய முகாம்களில் 2008 முதல் 2014 வரை இடம்பெற்ற சித்திரவதைகளில் முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு இதன் காரணமாக உலக நாடுகள் இலங்கை கடற்படையுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடற்படையின் புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகளையும் திருகோணமலை முகாமிற்கு பொறுப்பான அதிகாரிகளையும் இன்னமும் விசாரணை செய்யவில்லை,குற்றவாளிகள் பாதுகாக்க படுகின்றனர் அவர்களிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளுத பாதிக்கப்பட்டவர்களில் உயிருடன் உள்ளவர்கள் இன்னமும் விசாhரணை செய்யபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடற்படையின் தளபதியாகயிருந்தவர் கடற்படையின் புலனாய்வு பிரிவிற்குள் விசேட பிரிவொன்றை உருவாக்கியது கடற்படையின் சிரேஸ்ட அதிகாரிகளிற்கு தெரிந்திருக்கவேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.திருகோணாமலை கடற்படை முகாமில் 11 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறித்து விசாரணைகளை மேற்கொண்ட நிசாந்த சில்வா 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை குறித்து கடற்படையின் உயர் அதிகாரிகளிற்கு தெரிந்திருந்தது என குறிப்பிட்டிருந்தார் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.

கன் சைட் முகாமிற்கு பொறுப்பாகயிருந்த ஆர்எஸ்பி ரணசிங்க அவ்வேளை பாதுகாப்பு செயலாளராக காணப்பட்ட கோத்தாபய ராஜபக்சவுடன் நேரடியாக தொடர்புகொள்ள கூடியவராக காணப்பட்டார் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.கோத்தாபய ராஜபக்ச அந்த முகாமிற்கு பல தடவை விஜயம் மேற்கொண்டார்.இதுதவிர இலங்கை கடற்படையின் கிழக்கு கட்டளை தளபதி எஸ்எம்பி வீரசேகர பிரதி சிசிர ஜெயக்கொடி ஆகியோர் தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்லக்கூடியவர்களாகயிருந்தனர் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.

கன் சைட்டில் கடற்படையின் புலனாய்வு பிரிவினரின் நடவடிக்கைகள் குறித்து தங்கள் தலைமைக்கு தெரியப்படுத்திய கடற்படை அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டனர் அல்லது பதவிகள் பறிக்கப்பட்டனர்.அதேவேளை இந்த முகாமை இயக்கியவர்களும் அதற்கு ஆதரவு வழங்கியவர்களும் பதவி உயர்வு பெற்றனர்.திருகோணமலை கடற்படை தளத்திலிருந்து செயற்பட்ட கடற்படையின் விசேட பிரிவினருக்கு விசேட சலுகை வழங்கப்பட்டது அவர்களது வாகனங்கள் குறித்த விபரங்கள் பதியப்படாமலேயே அவர்கள் தங்கள் வாகனங்களை முகாமிற்குள் கொண்டு செல்லக்கூடியதாகயிருந்தது எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *