Search
Thursday 1 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையில் இன்று இதுவரை 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இலங்கையில் இன்று இதுவரை 23 பேருக்கு கொரோனா  வைரஸ் தொற்று

இலங்கையில் இன்று இதுவரை 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த 23 பேரும் பொலனறுவை – சேனபுர புனர்வாழ்வு மையத்தில் கண்டறியப்பட்டுள்ளனர்.நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,867 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதேவேளை இன்று 14 பேர் குணமடைந்திருந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,593 ஆக உயர்ந்துள்ளது.இருப்பினும் தற்போது 263 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *