Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையில் இன்று இதுவரை 40 புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இலங்கையில் இன்று இதுவரை 40 புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இலங்கையில் இன்று இதுவரை 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,789 ஆக உயர்ந்துள்ளது.கண்டறியப்பட்டவர்களில் கடற்படை வீரர்கள் 36 பேரும், இந்தியாவில் இருந்து 3 பேரும், பங்களாதேஷில் ஒருவருமாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட 4 பேர் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.அந்தவகையில் இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் 939 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.அத்தோடு மேலும் 03 பேர் பூரண சுகமடைந்துள்ள நிலையில், மொத்தமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கை 839 ஆக காணப்படுகின்றது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *