Search
Monday 16 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையில் இருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக தகவல்

இலங்கையில் இருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக தகவல்

இலங்கையில் இருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் கடலோர பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சந்தேகத்திற்குரிய நபர்களோ, படகுகளோ தென்பட்டால் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்து நிலையங்கள் விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அத்துடன் கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு வரும் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.அத்துடன் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *