Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையில் கொரோனா : ஒரே நாளில் 9 பேர் இறப்பு

இலங்கையில் கொரோனா : ஒரே நாளில் 9 பேர் இறப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 52 வயது ஆண், வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 65 வயது ஆண் மற்றும் 75 வயது பெண், தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 89 வயது ஆண், கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 48 வயது பெண் மற்றும் 72 வயது ஆண், கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 69 வயது பெண், வெள்ளவத்தையைச் சேர்ந்த 76 வயது ஆண், பிரதேசம் குறிப்பிடப்படாத 76 வயது பெண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 3 பேர் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர்.

-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *