Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையில் கொரோனா! மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

இலங்கையில் கொரோனா! மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

கொரோனா தொற்று ஆரம்பித்த போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் விதிப்பதா? இல்லையா? என்பது மக்களின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மக்கள் தொடர்ந்தும் சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றி நடந்துகொள்வார்களாக இருந்தால் அவ்வாறான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவையேற்படாது எனவும் இல்லையேல் அத்தகைய கட்டுப்பாடுகளுக்கு செல்ல நேரிடும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதங்களில் மக்கள் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர். இதனால் அது சமூகத்திற்குள் பரவுவதை கட்டுப்படுத்த முடிந்தது. ஆனாலும் தொடர்ந்தும் மக்கள் அவ்வாறாக நடந்துகொள்வாராக இருந்தால் மேலும் அது பரவாது கட்டுப்படுத்த முடியும். ஆனால் மக்களின் பங்களிப்பு குறைந்ததை போன்றே தெரிகின்றது. என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா அச்சுறுத்தல் நாட்டிலிருந்து முற்றாக இல்லாது போகவில்லையெனவும் இதனால் மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதுடன் மக்களிடையே நடத்தப்படும் பீ.சீ.ஆர் பரிசோதனைகளையும் அதிகரிக்கவும் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *