Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகிறது

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகிறது

மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கடந்த 4ஆம் திகதி கண்டறியப்பட்டது.அதனைத்தொடர்ந்து, குறித்த பெண்ணுடன் தொடர்புடையவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்கள் என நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களிலும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.அதன்படி இன்று மாத்திரம் இலங்கையில் கொழும்பு -07, மீகொட, பாணந்துறை, கொட்டாவ உள்ளிட்ட பல இடங்களில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.அதற்கமய, பேலியகொட மீன் சந்தையில் 49 கொரோனா நோயாளிகள் இன்று அடையாளம் காணப்பட்டனர்.வவுனியா நெடுங்கேணியில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு -7 வாட் பிளேஸில் உள்ள கறுவாத் தோட்ட குடியிருப்பாளர் ஒருவருக்கு கொவிட் -19 தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் டினுக குருகே தெரிவித்தார்.இன்று வைரஸ் தொற்றுக்கு ஆளானதாக உறுதிப்படுத்தப்பட்டவர் முன்பு வைரஸ் தொற்றுக்குள்ளானவரின் உறவினர் எனத் தெரிய வருகிறது.இதேவேளை மீகொடா பொருளாதார மையத்தில் காய்கறி கடையின் உரிமையாளருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அத்துடன் பாணந்துறையில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொட்டாவயில் உள்ள மீன் சந்தையில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *