Search
Thursday 9 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 1,710 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை  1,710 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 1,710 ஆக அதிகரித்துள்ளது.அந்தவகையில் இன்றுமட்டும் மாலை 06 மணி நிலவரப்படி 27 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 19 பேர் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் ஒருவர் குவைத்தில் இருந்து நாடு திரும்பு தனிமைப்படுத்தப்பட்டவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு 07 பேர் கடற்படையினர் என்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.இதேவேளை தொற்றுக்கு இலக்கான 13 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 836 பேர் மாத்திரமே வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *