Search
Friday 19 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையில் தேடப்படும் பிரபல பாதாள குழு உறுப்பினர்கள் டுபாயில் கைது : மாகந்துர மதுஷும் சிக்கினார்

இலங்கையில் தேடப்படும் பிரபல பாதாள குழு உறுப்பினர்கள் டுபாயில் கைது : மாகந்துர மதுஷும் சிக்கினார்

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மாகந்துரே மதுஷ் அடங்கலாக பிரபல பாதாள குழு உறுப்பினர்கள் 23 பேர் டுபாயில் கைதாகியுள்ளனர்.
டுபாயிலுள்ள சொகுசு ஹோட்டலொன்றில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக டுபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளும் டுபாய் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கைகளின் மூலமே இவர்கள் கைதாகியுள்ளனர்.
இவர்கள் இலங்கையில் பல்வேறு கொலை சம்பவங்கள் , போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு பாரதூரமான குற்றங்கள் தொடர்பாக தேடப்பட்டு வருபவர்களாகும். இவர்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் டுபாயில் கைதாகியுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *