Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையில் புகைத்தல் காரணமாக கிழமை ஒன்றுக்கு 191 உயிரிழக்கின்றனர்

இலங்கையில் புகைத்தல் காரணமாக கிழமை ஒன்றுக்கு 191 உயிரிழக்கின்றனர்

புகைத்தலுக்கு எதிரான பிரசாரங்கள் காரணமாக புகைப் பிடிப்போரின் எண்ணிக்கை 15 சதவீதத்தினால் குறைந்துள்ளபோதிலும் , 16,85,000 பேர் தினமும் புகைப்பிடிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு தொடர்பில் விளக்கம் அளித்த கொழும்பு பல்கலைக்கழக புகைத்தலுக்கு எதிரான நிலையத்தின் பணிப்பாளர் மருத்துவர் மகேஷ் ராஜசூரிய புகைபிடிப்பதானது சுகாதாரம், செல்வம் ஆகியவற்றை பாதிப்பதாக கூறினார்.

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது புகைத்தல் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை இலங்கையில் குறைவாக இருப்பினும் கிழமை ஒன்றுக்கு 191 பேர் உயிரிழப்பதாக அவர் கூறினார்.

வருடம் ஒன்றில் 12,300 பேர் உயிரிழப்பதாகவும், 10 க்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட 6000 சிறுவர்கள் மற்றும் 15 வயதுக்கு மேற்பட்ட 16, 85,00 பேர் தினமும் சிகரெட் பயன்படுத்துவதாக கூறினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *