Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையில் மேலும் 73 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இலங்கையில் மேலும் 73 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

நாட்டில் மேலும் 73 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் எனவும் ஏனைய 71 பேர் குறித்த தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 73 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 2 பேர் தனிமைப்படுத்தல் மையங்களிலும் ஏனையோர் வெவ்வேறு இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை பெண் ஊழியரின் கொரோனா தொற்று காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1,972 ஆக உயர்ந்துள்ளது.இதன்படி இலங்கையின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 5,427 ஆகும்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *