செய்திகள்

இலங்கையில் வேகமெடுக்கும் கொரோனா – ஒரு வாரத்தில் 1100 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பெண்ணொருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் மூலம் இது வரையில் 1186 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் இது வரையில் தொற்று உள்ளான வர்களில் 4628 பேரில் 950 பேர் கடற்படையினர் என்பதுடன் 1527 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களாகும் , 651 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் அடையாளம் காணப்பட்டவர்களாகும். 1186 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன் மேலும் 313 பேர் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும்.
கடந்த ஒரு வாரத்திற்குள் 1100 பேருக்கும் அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினத்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாளர்கள் மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு இரண்டு வார்ட்டுகளும், சத்திரச்சிகிச்சை பிரிவு ஒன்றும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு பொரளையில் உள்ள சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 9 மாதக் குழந்தையொன்றுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், அந்த வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

80a8098ad959e3ea7b6f8a724d7e34e666e0e900பாணந்துரை வைத்தியசாலையின் அவசர பிரிவில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் மகளுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அந்த பிரிவை மூடி அங்கு பணியாற்றுபவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்திலுள்ள மற்றுமொரு ஆடைத் தொழிற்சாலையில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த ஆடைத் தொழிற்சாலையில் ஒருவருக்கு தொற்று இருந்த நிலையில் அங்கு மற்றைய ஊழியர்களின் நடத்தப்பட்ட பரிசோதனையில் 11 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
அத்துடன் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் கற்கும் 3 ஆம் வருட மாணவி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவி தங்கியிருக்கும் தனியார் விடுதியில் அவருடன் இருந்த நண்பியின் சித்தி மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர் என தெரியவந்துள்ளது.
சிலாபம் பகுதியில் மீனவர் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இவருடன் கடலுக்கு சென்ற 6 மீனவர்கள் படகொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இது வரையில் தொற்று உள்ளான வர்களில் 4628 பேரில் 950 பேர் கடற்படையினர் என்பதுடன் 1527 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களாகும் , 651 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் அடையாளம் காணப்பட்டவர்களாகும். 1186 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன் மேலும் 313 பேர் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும்.
இதேவேளை மன்னாரிலும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 27 பேருக்கு முதல் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியத் டி.வினோதன் தெரிவித்துள்ளார். -(3)