Search
Friday 28 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையைச் சேர்ந்தபெண்ணொருவருக்கு இத்தாலியில் கொரோனா வைரஸ் அறிகுறி

இலங்கையைச் சேர்ந்தபெண்ணொருவருக்கு இத்தாலியில் கொரோனா வைரஸ் அறிகுறி

அதிக காய்ச்சல் மற்றும் கடுமையான சுவாசக் கோளாறினால் இத்தாலியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர், கொரோனா வைரஸ் அறிகுறி தொடர்பாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.இதேவேளை, உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் சீனா முழுவதும் 1,287 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 63 வயதான இலங்கை பெண், இத்தாலியில் நேபிள்ஸ் நகரத்திலுள்ள கோட்டுக்னோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.குறித்த பெண் கடந்த செவ்வாயக்கிழமை இலங்கையில் இருந்து இத்தாலிக்குச் சென்றிருந்த நிலையிலேயே அவருக்கு நோயின் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *