Search
Saturday 7 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை அணிக்கு ஆதரவளியுங்கள் – இரசிகர்களிடம் மகேல வேண்டுகோள்

இலங்கை அணிக்கு ஆதரவளியுங்கள் – இரசிகர்களிடம் மகேல வேண்டுகோள்

நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கை அணியின் பின்னாள் அணி திரளுமாறு முன்னாள் தலைவர் மகேல ஜெயவர்த்தன கேட்டுக்கொண்டுள்ளார்
டுவிட்டர் மூலம் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
நான் இரசிகர்களின் ஏமாற்றத்தை உணர்கின்றேன் ஆனால் ஏற்கனவே கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள அணி வீரர்கள் மீது இரசிகர்கள் தங்கள் ஏமாற்றத்தை திணிப்பதனால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என மகேல குறிப்பிட்டுள்ளார்
இலங்கை அணியின் இரசிகர் ஓருவருடன் டுவிட்டர் மூலம் மேற்கொண்ட உரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
அணி தொடர்ச்சியாக வெற்றிபெறுவதற்கு என்ன வழியுள்ளது என்ற இரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ள மகேல அதிகாரத்தில் உள்ளவர்களே அதற்கான தீர்வை கண்டுபிடிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *